“பூ” - படத்தின் பாடல்கள்
எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது.
இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும்.
இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப் பாடகர்களால் பாடப்பட்ட “ச்சூ ச்சூ மாரி” இரண்டு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.

1 நெல்லைதமிழ்on 22 Sep 2008 at 5:42 pm link to this comment
நானும் அந்த படப்பாடல்களை அறைகுறையாய் கேட்டேன். நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் தளத்தை தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன்.
2 சதீஷ்on 24 Sep 2008 at 3:55 pm link to this comment
இந்தத் தளத்தை தேடிக்கொண்டிருந்தீர்களா? அப்படி என்ன விசேஷம்?
3 நெல்லைதமிழ்on 25 Sep 2008 at 12:23 pm link to this comment
ஒரு தமிழர் தலைசிறந்த பல Themes களை வடிவமைத்து இலவசமாய் அளிப்பது என்பது எங்களை பொறுத்தவரையில் பெருமைப்படக்கூடிய விஷயம் தானே… உங்களை பாராட்டத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.
4 சதீஷ்on 25 Sep 2008 at 2:30 pm link to this comment
நன்றி நெல்லைதமிழ்,
எத்தனையோ பேர் பாராட்டினாலும், இன்னொரு தமிழனின் பாராட்டைக் கேட்பது இன்னும் மகிழ்ச்சி.
5 suryaon 02 Jan 2009 at 3:32 pm link to this comment
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தரமான தமிழ் படம். Xlent Songs.
திரைப்படத்திற்கும் விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கள்