நெஞ்சுக்கு நீதி – குறும்படம்

சமீபத்தில் கலைஞர் தொ.காவில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது.
நளன் என்கிற ஓர் இயக்குனரின் “சீரியஸ் காமெடி”. மிகவும் ரசித்தேன். சமீபத்தில் YouTube இல் தென்பட்டது. முழுப்படமும் பத்து நிமிடங்களுக்கும் குறைவு தான் ஆனால் இரண்டு பாகங்களாக இருக்கிறது..
பார்த்து ரசியுங்கள்.
நெஞ்சுக்கு நீதி பாகம் 1 : 8 ஆவது நிமிடத்தில் தொடங்குங்கள்.

நெஞ்சுக்கு நீதி பாகம் 2

மறுமொழி இல்லை இதுவரை

May 17, 2010 - அஞ்சலிComments Off on நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

அப்பா,
எங்கள் உள்ளத்தில் வாழ ஆரம்பித்து, இன்றோடு நான்கு ஆண்டுகள்…
இன்றல்ல நேற்றல்ல எப்போதும் உங்கள் நினைவில் வாழ்கிறோம்.

Comments Off on நான்காம் ஆண்டு நினைவஞ்சலி இதுவரை

Apr 8, 2010 - நான் பாடிய பாடல்Comments Off on செந்தமிழ்த் தேன் மொழியாள் – எனது குரலில்

செந்தமிழ்த் தேன் மொழியாள் – எனது குரலில்

சென்ற வாரம் நண்பன் எட்வின் வீட்டில், ஈஸ்டர் கொண்டாடிய போது, நான் பாடிய ஒரு பாடல். கேட்டு அல்லது சிரித்து மகிழுங்கள்…..

Comments Off on செந்தமிழ்த் தேன் மொழியாள் – எனது குரலில் இதுவரை

Jan 31, 2010 - நாட்டு நடப்புComments Off on பத்ம பூஷண் இளையராஜா!

பத்ம பூஷண் இளையராஜா!

Ilayaraaja -at a Press Meet
இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய அரசு, பத்மபூஷண் விருதினை வழங்கி, விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
அது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் கொடுத்தது நிருபர்களுடனான ஒரு சந்திப்பு. நான் கொடுப்பது இந்தப் பதிவு.

வாழ்த்துக்கள் ராஜா சார்!

[Ilayaraaja -at a Press Meet – படம் நன்றி: IndiaGlitz.com]

Comments Off on பத்ம பூஷண் இளையராஜா! இதுவரை

கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்

என் அப்பா தொடர்ந்து பல வருடங்கள், சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, தரிசனம் செய்து வந்து இருக்கிறார்கள்.
பக்தி என்றால் என்ன என்பதை வாழ்க்கையாக நடத்திக் காண்பித்த நாட்கள் அவை.

அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் எழுதி இசையத்து, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள்.
இப்பவும் வரிகள் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்குப் பதிந்தவை.

காலங்கள் உருண்டோட, இப்போது அந்த ஒலிப்பேழைகள் போன இடம் தெரியவில்லை.
கடைகளில் கிடைக்குமா? தெரியவில்லை…

இன்று காலையில் ஏனோ “கார்த்திகை அதிகாலை நீராடி” பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
மதியம் கூகுளாண்டவரிடம் மன்றாடியதில் கடைசியாக அந்தப் பாடல் youtube-ல் தரிசனம்.

இப்போது அது உங்களுக்காக!
Read more »

3 மறுமொழிகள் இதுவரை

பயிர் [payir.org] சமூக சேவை அமைப்பு

என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவரும், நண்பருமான செந்தில் குமார் இந்தியாவில் நடத்தும் ஒரு சமூக சேவை அமைப்பு தான் “பயிர்”.
அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, அது வரை, பத்து வருடங்களில் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்தியா சென்றார்.
திருச்சி அருகில் உள்ள “தேனூர்” என்கிற கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடமும், ஆரம்ப சுகாதார நிலையமும் ஆரம்பித்து, அந்த ஊர் மக்களுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் இலவசமாய் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது பேட்டி சமீபத்தில் விஜய் டி.வியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. அதன் ஒளி ஒலிப்பதிவை இங்கே பதிவதில் எனக்கொரு பெருமை.

அவருக்கும் அவரது அமைப்புக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்ய, அவரது இணைய தளத்தைப் பாருங்கள்.

மறுமொழி இல்லை இதுவரை

அச்சமுண்டு அச்சமுண்டு – ஒரு பார்வை

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தை, திரையரங்கில் சென்று பார்த்தேன்.
வெளியான முதல் நாளிலேயே பார்த்திருக்க வேண்டியது, எப்படியோ தள்ளித் தள்ளிப் போய், “இன்று இப்படம் கடைசி” என்று தெரிந்தபிறகு கடைசி நாளில், குடும்பத்துடன் சென்று அமர்ந்தேன்.

இயக்குநர் எனக்குத் தெரிந்தவர் என்றாலும்,சமநிலையில் இருந்து இந்தத் திரைப்படத்தைக் குறித்த என் பார்வையைப் பதிகிறேன்.

aa1 சமூகத்திற்குத் தேவையான ஒரு செய்தியை, ஒரு சினிமாவுக்குள், சினிமாத்தனங்கள் இல்லாமல் பதிவு செய்து இருக்கும் ஒரு நல்ல முயற்சி. உங்களுக்கு அருகாமையில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தால், கட்டாயம் சென்று பாருங்கள்.
இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

படத்தின் திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும்,
1. சினேஹா, ப்ரசன்னா மற்றும் ஜான் ஷேயின் நடிப்பு
2. திறமையான இயக்கம்
3. கொடூரமான வில்லத்தனத்தையும் சொல்லாமல் சொல்லிப் புரியவைக்கும் காட்சியமைப்புகள்
4. படத்தின் மையக் கருத்து
போன்ற பல நல்ல விஷயங்களுக்காக அவசியம் பார்க்கவேண்டிய படம்.
படத்திற்கு கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55

மறுமொழி இல்லை இதுவரை

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

சமீபத்தில் படித்ததில் பிடித்த பதிவுகளுக்கு இங்கே சில சுட்டிகள்…
சொக்கனின் ஏதாச்சும் ரெண்டு மிருகம் பதிவிலிருந்து….

இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.

சரவ்-வின் கவித! கவித!!.. படி!! பதிவிலிருந்து….

எட்டு கால்கள்
சுமந்த மேனி
எண்ணூறு கால்களில்

நீங்களும் படித்து மகிழுங்கள்.

மறுமொழி இல்லை இதுவரை

மூன்றாம் ஆண்டாய் நினைவில் வாழும் அப்பா

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

நேற்று நடந்தது போல் இருக்கிறது
இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது அந்த தினம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும் கூட
உள்ளத்தின் உள்ளே பீறிடும் உணர்வுகளை
எழுத்தில் சொல்ல ஏதுவாயில்லை.

எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படியொரு தந்தை.
இருந்த 59 வயதிற்குள் வார்த்தைகளால் சொல்லாமல்
வாழ்ந்து காட்டி நீங்கள் சொல்லிக் கொடுத்தது
இன்னமும் நெஞ்சில் ஈரமாய்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

திருக்குறளில் [நன்றி திருக்குறள் Browser] சொன்னது போல், எங்கள் அனைவரையும் அவையத்தில் முந்தியிருக்க நீங்கள் பாடுபட்டீர்கள்.
இனி நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

நிச்சயம் செய்வோம். நினைவில் எங்களுடன் நீங்கள் வாழும்போது ஏன் முடியாது?
——–
அப்பாவிற்குப் பிடித்த பாடல் ஒன்று, அவர்களின் நினைவாக.
“எனக்கொரு அன்னை” பாடல் – இளையராஜா அவர்களின் கீதாஞ்சலி என்கிற இசைத்தொகுப்பில் இருந்து…
[audio:enakkoru-annai.mp3]

மறுமொழி இல்லை இதுவரை

நான் கடவுள் – என் எண்ணங்கள்

நான் கடவுள் ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது.
நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள்.
இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்,
குறிப்பாக

  1. விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி
  2. மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை
  3. படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை
  4. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு
  5. கதாபாத்திரங்களாகவே மாறிவிட்ட நடிகர்கள் பூஜா, கோவை கிருஷ்ணமூர்த்தி[‘முருகன்’ கதாபாத்திரம்], அறிமுக நடிகர் ராஜேந்திரன் [வில்லன் கதாபாத்திரம்]

என சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம்.

நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.
Read more »

5 மறுமொழிகள் இதுவரை