யுவன் இசையில் ராஜா பாடிய பாடல்கள்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை.

“எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா
“நம்ம காட்டுல மழ பெய்யுது” – பட்டியல்
“அறியாத வயசு, புரியாத மனசு” – பருத்திவீரன்
“பறவையே எங்கு இருக்கிறாய்?” – கற்றது தமிழ்

எல்லாப் பாடல்களையும் தனித் தனியாய் அலசலாம், ஆனால் இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது சமீபத்தில் எனது ஐஃபோனில் அதிகமாக கேட்கப்பட்ட பாடலில் சேர்ந்து கொண்ட, கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய, “பறவையே எங்கு இருக்கிறாய்?” பாடல் பற்றி.

பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…
பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே!!
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே!!!
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே,
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ?
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ?

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக,
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக….
(பறவேயே…)

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே!
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

(பறவையே)

ஏழை…காதல்….
மலைகளில் தனில் தோன்றுகின்ற ஒரு நதியாமோ……
மண்ணில்..விழுந்தும் ஒரு காயமின்றி…
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ….

இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி,
வேறென்ன நானும் கேட்பேன்?
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…!

இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா?…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?…

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

ராஜா சாரின் தன் குரலில் ஒவ்வொரு வரிக்குள்ளும் எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறார், அதுவும் அந்த “முதல் முறை” வரிகள் ஒவ்வொன்றும், எவ்வளவு மெருகுடன் வெளிவருகிறது பாருங்கள். Wow…What an awesome rendition!

முழுப்பாடலையும் கேட்க கீழே கிளிக்குங்கள்.
பறவையே எங்கு இருக்கிறாய்?
[audio:paravaiye-engu-irukkiraai.mp3]

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

"நான் கடவுள்" – எப்போ ரிலீஸ்?

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”.

இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான்.
எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும்.

சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் பாராட்டி, ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்து இருந்தது. அதனால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, தேடிப் பிடித்து, எக்மோரில் ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்ததாய் ஞாபகம்.
இடைவேளையைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. பச்சை நிற உடையில், மன நோயாளிகள் நிறைந்த அந்த மடத்தினுள்ளே நம்மை நடத்திச் செல்லும் காமரா. அப்போது ஆரம்பிக்கும் தலைவர் குரலில் அந்தப் பாடல், “எங்கே செல்லும் இந்தப் பாதை..யாரோ யாரோ அறிவார்….”
நெஞ்சைப் பிசையும் பாடல்-னு சொல்லுவாங்களே, அந்த வகைல நம்பர் ஒன் அது.
எங்கே செல்லும் இந்தப் பாதை
[audio:enge-sellum.mp3]

அதே மாதிரி பிதாமகன் படத்தில், பின்னணி இசையில் சேர்க்கப்பட்ட பாடல் தான் “யாரது யாரது மனசத் திறந்தது..திறந்தது…” உருக்கிவிடும் கேட்பவரை. கேட்டுப் பாருங்கள்.
பிதாமகன் பின்னணி இசைப் பாடல்
[audio:yaarathu.mp3]

இது போல ஏதாச்சும் ஒன்று கட்டாயம் இருக்கும் “நான் கடவுள்” ல. சரியா?

2 மறுமொழிகள் இதுவரை

குசேலன் – விமர்சனம்

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம்.
அதற்குப் பிறகு இன்று தான், கணினியின் முன் அமரும் வாய்ப்பு வந்தது. அதற்குள் படம் ஒரு குப்பை என்கிற விமர்சனம் இணையம் முழுக்க எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது.

குசேலன்

  • படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி.
    “அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது.
  • படம் முழுக்க காமெடி நடிகர்கள் [வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்] என அனைவரும் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
    அதற்கெல்லாம் சிரிக்காத மக்களும், பசுபதி ஓடி வந்து கொடுக்கும் கடலை மிட்டாயில் சிரித்து விடுகிறார்கள்.
  • அதே போல திரையில் தோன்றியவுடனே சிரிப்பை ஏற்படுத்திய மற்றொரு நடிகர் பிரபு. அது என்னவோ தெரியவில்லை, அவர் பேசுவதற்கு முன்பே மக்கள் சிரித்துவிடுகிறார்கள். “என்ன கொடுமை சரவணன் இது”.
    இவர்கள் எல்லோரையும் விட சந்தான பாரதியின் காமெடி பரவாயில்லை.
  • வடிவேல் காமெடி என்கிற பெயரில் அடிக்கும் சில கூத்துக்களைப் பார்த்தும் “U” சர்டிபிகேட் கொடுத்த சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது எனப் புரியவில்லை.

படம் எடுப்பதற்கு முன் நடந்திருக்கக் கூடிய ஓர் உரையாடல்.
பசுபதி : “டைரக்டர் சார், இந்தப் படத்தில என்னொட ரோல் என்ன சார்?”
பி.வாசு: “அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லைய்யா…சும்மா வந்துட்டுப் போ, போதும்”
பசுபதி : “அது எப்படி சார், சும்மா வந்துட்டுப் போனா, ஒரே விளக்கெண்ணை மூஞ்சியா இருக்குமே சார்…”
பி.வாசு: “அதுக்காகத் தானேய்யா உன்னை செலக்ட் பண்ணினதே…சும்மா தொணதொணக்காம இருய்யா…”
பசுபதி : “சார், மக்களைப் பத்தி உங்களுக்கு கவலையே இல்லையா?”
பி.வாசு: “மக்களைப் பத்தியெல்லாம் உனக்கென்னைய்யா கவலை…பிரபுவுக்குத் தாலின்னா என்னன்னே தெரியாதுன்னு ‘சின்னதம்பி’ யில ஒரு கதை விட்டேன், அதையே இந்த மக்கள் ஒரு வருஷத்துக்கு ஓட வைக்கலையா?…”

புகைப்படம் நன்றி:Flickr.

Disclaimer:
பசுபதி-யின் நடிப்புத் திறமையைக் குறை கூற முடியாது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ முதல் ‘வெயில்’ வரை, பல்வேறு திரைப்படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து வியந்தவன் தான் நான். இந்த குசேலனில் அவரின் பங்கு மிகக் குறைவு என்பதே இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல விழைவது.

3 மறுமொழிகள் இதுவரை

கே.ஜே.யேசுதாஸின் ரசிகர் வலைப்பதிவு

கே.ஜே.யேசுதாஸ் – தமிழ் சினிமா இசையில், தலைவர் ராஜா சார் மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் பல நல்ல பாடல்கள் இவர் குரல் வழி வந்து இருக்கின்றன.
“கண்ணே கலைமானே”, “அம்மா என்றழைக்காத”, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”, “மனிதா மனிதா இனி உன் விழிகள்”, என சொல்லிக் கொண்டே போகலாம்.

“ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது”

இவர் பாடிய “ஏழிசை கீதமே” என்ற பாடலின் வரிகள் இவை.

சமீபத்தில் இவரது ரசிகர் ஒருவரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தது. நீங்களும் படித்து ரசியுங்கள்.

2 மறுமொழிகள் இதுவரை

குணா திரைப்படப் பின்னணி இசை

குணா – திரைப்படமும், தளபதி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இரண்டு திரைப்படங்கள்.
இரண்டுமே ராஜா சாரின் இசையில், மிகச் சிறந்த பாடல்கள் மட்டுமன்றி, அருமையான பின்னணி இசையும் உள்ள திரைப்படங்கள்.
புதிதாக வரும் ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவசியம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த படங்களின் பின்னணி இசையில் பொதிந்து உள்ளன.

சமீபத்தில் ரேடியோஸ்பதியின் வலைப்பதிவில், இந்த பதிவைப் படித்து, கேட்டு ரசித்தேன். நீங்களும் கேளுங்கள்.
குணா பின்னணி இசைத் தொகுப்பு.

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம்.
பாடல் : கண்கள் இரண்டால்.
ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம்.
எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை”

பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ்.
பின்வரும் பாடல்களில் ஏதாவது ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா
அழகான ராட்சசியே – முதல்வன் – ஏ.ஆர்.ரகுமான்
சுடும் நிலவு சுடாத சூரியன் – தம்பி – வித்யாசாகர்

“இதுவா, இது ரீதிகௌளை” என்று சொல்லிவிட்டீர்களோ, உங்கள் முதுகில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.

பாடலைப் பார்க்க கீழே சொடுக்குங்கள்
Read more »

4 மறுமொழிகள் இதுவரை

சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி

சிறில் அலெக்ஸ் மீண்டும் ஒரு சிறுகதைப் போட்டியைத் தொடங்கி இருக்கிறார்.
இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி.
அவசியம் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் நானும் வருகிறேன்.

மறுமொழி இல்லை இதுவரை

ஜெயச்சந்திரனின் பாடல்கள்

இந்த வாரம் தேன் கிண்ணத்தில், ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒலிபரப்புவதாக அறிந்தேன்.
மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடி இருந்தாலும், தமிழ் சினிமாவின் சில சிறந்த பாடல்கள் இவர் குரல் வழி வந்திருக்கின்றன.
மென்மையான, நெஞ்சை வருடும் குரல் கொண்ட இவரின் பாடல்களை, இந்த வலைப்பதிவில் கேட்டு மகிழலாம்.

மறுமொழி இல்லை இதுவரை

எனக்குத் தெரிந்த தமிழ்ப் பட இயக்குனர்

வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர்.
பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் உருவாகும் கதையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
படியுங்கள் : அருண் வைத்யநாதன் On அச்சமுண்டு அச்சமுண்டு.
ஒரே ஓர் உபரித் தகவல் : வலைப்பூ வடிவமைப்பு செய்தது அடியேனும் என் மனைவியும் :)

3 மறுமொழிகள் இதுவரை