0

இன்று பிறந்த நாள் – இசையராஜா

இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள் இசைஞானி திரு.இளையராஜா விற்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில. 1. கானா பிரபு – சில பாடல்களோடு 2. உன் இசை மீது ஒரு காதல்.

15

தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல். ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல். பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார்… Continue Reading

1

ராஜா-வின் முதல் பாடல்

ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும். ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா? அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே? 🙂 அதான் இல்லை. என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார்.… Continue Reading

0

கை வீணையை ஏந்தும் கலைவாணியே…

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது. சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும். நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993… Continue Reading

7

வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது. இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார். அது இப்போது இங்கே உங்களுக்காக !