Posts with the Tag 'இளையராஜா'

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்… திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள். இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம் ( குறிப்பாக சிவபுராணம்) பாடப்படுகிறது. தாரை தப்பட்டை ராஜா சாரின் ஆயிரமாவது படம். அதன் பின்னணி இசையில் இரு வேறு இடங்களில், […]

இது தந்தையின் தாலாட்டு (A Father’s Lullaby)

சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது. மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன். கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது. “தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின் மெட்டில், அவரே வேறு வரிகளை அமைத்துப் பாடியிருந்தார். ஏழேழு கடல் கடந்து இங்கு வந்து வாழ்பவரே என்றென்றும் உனக்கெனவே இசை […]

Oct 2, 2010 - அஞ்சலி

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalathaஸ்வர்ணலதா-வின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளையும் நெஞ்சத்தையும் பிடித்துக் கொள்ளும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களைத் தருவது கிறுக்கல்ஸ்.காம் செய்யும் அஞ்சலி.

நான் கடவுள் – என் எண்ணங்கள்

ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது. நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள். இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள், குறிப்பாக விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களாகவே […]

இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் ஒரு கதை இப்படிப் போகிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி […]

யுவன் இசையில் ராஜா பாடிய பாடல்கள்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை. “எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா “நம்ம காட்டுல மழ பெய்யுது” – பட்டியல் “அறியாத வயசு, புரியாத மனசு” – பருத்திவீரன் “பறவையே எங்கு இருக்கிறாய்?” – கற்றது தமிழ் எல்லாப் பாடல்களையும் […]

"நான் கடவுள்" – எப்போ ரிலீஸ்?

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”. இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான். எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும். சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் […]

குணா திரைப்படப் பின்னணி இசை

குணா – திரைப்படமும், தளபதி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இரண்டு திரைப்படங்கள். இரண்டுமே ராஜா சாரின் இசையில், மிகச் சிறந்த பாடல்கள் மட்டுமன்றி, அருமையான பின்னணி இசையும் உள்ள திரைப்படங்கள். புதிதாக வரும் ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவசியம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த படங்களின் பின்னணி இசையில் பொதிந்து உள்ளன. சமீபத்தில் ரேடியோஸ்பதியின் வலைப்பதிவில், இந்த பதிவைப் படித்து, கேட்டு ரசித்தேன். நீங்களும் கேளுங்கள். குணா பின்னணி இசைத் தொகுப்பு.

கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம். பாடல் : கண்கள் இரண்டால். ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம். எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை” பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ். […]

Pages:12»