Posts with the Tag 'இளையராஜா'

இன்று பிறந்த நாள் – இசையராஜா

இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள் இசைஞானி திரு.இளையராஜா விற்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில. 1. கானா பிரபு – சில பாடல்களோடு 2. உன் இசை மீது ஒரு காதல்.

தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல். ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல். பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு, காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல். முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே […]

ராஜா-வின் முதல் பாடல்

ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும். ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா? அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே? :) அதான் இல்லை. என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார். அப்போ இந்தியாவின் பிரதமரா இருந்த “ஜவஹர்லால் நேரு” இறந்து விட்ட சமயம். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கண்ணதாசன் பாடல் […]

கை வீணையை ஏந்தும் கலைவாணியே…

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது. சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும். நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993 அல்லது 1994ஆம் வருடம். அப்பொழுதுதான் முதன்முறை இந்தப் பாடலைக் கேட்டோம். கேட்டவுடனே மனதை மயக்கும் ஒரு தெய்வீகத் தன்மை அதில் […]

வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது. இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார். அது இப்போது இங்கே உங்களுக்காக !

காற்றில் வரும் கீதமே…

ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன். அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்…. சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ… இசை : தலைவர் இளையராஜா பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும். என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள். ஒரு இசைக் குடும்பத்தைக் […]

Aug 25, 2005 - பயனுள

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள்

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள் இப்பொழுது புத்தக வடிவில். எளிதாக பிரதி எடுக்கும் வகையில். முதலில் தயாரித்தவர் : மதன் என்கிற ஒரு ரசிகர். இணையத்தில் பகிர்வது மட்டும் நான். திருவாசகம் புத்தக வடிவில். நன்றி.

எங்க ஊரு பாட்டுக்காரன்

காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார். அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில். திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும். நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்… “பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி கல்யாணம் பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோஷம்…” அது ஆஷா போன்ஸ்லெ வா, லதா மங்கேஷ்கரா ?உம்ம்ம்…ஆஷா […]

Pages:«12