Archive for the 'என்னவென்று சொல்வது' Category

சென்னையில் ஒரு டிசம்பர் மாதம்…

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, இந்த டிசம்பர் மாதத்தில் சென்னை வர இருக்கிறேன். சந்திக்கும் எண்ணமிருந்தால் ஒரு பின்னூட்டமிடுங்கள். பார்ப்போம்.

இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதில் ஒரு கதை இப்படிப் போகிறது.
ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி இருக்கிறார்.
பேராசிரியர் பதட்டமாக “கோப்பை [...]

“நான் கடவுள்” - எப்போ ரிலீஸ்?

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”.
இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான்.
எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும்.

சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் பாராட்டி, ஹிந்து பத்திரிக்கையில் [...]

சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி

சிறில் அலெக்ஸ் மீண்டும் ஒரு சிறுகதைப் போட்டியைத் தொடங்கி இருக்கிறார்.
இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி.
அவசியம் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் நானும் வருகிறேன்.

எனக்குத் தெரிந்த தமிழ்ப் பட இயக்குனர்

வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர்.
பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் உருவாகும் கதையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
படியுங்கள் : அருண் வைத்யநாதன் On அச்சமுண்டு அச்சமுண்டு.
ஒரே ஓர் உபரித் தகவல் : வலைப்பூ வடிவமைப்பு [...]

இன்று பிறந்த நாள் - இசையராஜா

இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள்
இசைஞானி திரு.இளையராஜா விற்கு
எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில.
1. கானா பிரபு - சில பாடல்களோடு
2. உன் இசை மீது ஒரு காதல்.