Posts from the 'அஞ்சலி' Category

கடிதம் எழுதி இருக்கிறீர்களா?

நீங்க எப்பவாச்சும் யாருக்காச்சும் கடிதம் எழுதி இருக்கிறீர்களா? விடுமுறை விண்ணப்பக் கடிதங்கள் [As I am suffering from fever] போன்றவை இதில் சேர்த்தி இல்லை. பர்சனல் லெட்டர்ஸ். தமிழ்ல எப்படி சொல்லலாம்? தனிப்பட்ட கடிதங்கள்? இந்தக் காலத்துலயும் இது வழக்கத்துல இருக்கா? நான் காலேஜ் படிச்ச காலத்துல (1993 – 97) ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்குப் போவோம். ஊர் சுவாமிமலை. படிச்சதெல்லாம் திண்டுக்கல்ல. இந்த ரெண்டு வார இடைவெளில, அப்பா கிட்டே […]

Oct 2, 2010 - அஞ்சலி

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalathaஸ்வர்ணலதா-வின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளையும் நெஞ்சத்தையும் பிடித்துக் கொள்ளும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களைத் தருவது கிறுக்கல்ஸ்.காம் செய்யும் அஞ்சலி.

சுஜாதா- ஒரு சகாப்தம்

சுஜாதா – என்கிற ரங்கராஜன் என்கிற, தமிழின் முக்கியமான எழுத்தாளர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் தூவிய எழுத்துக்கள் இன்றும் காற்றில் கலந்து இருக்கிறது. வாசகனோடு இயல்பாய்ப் பேசும் எழுத்து நடை அவருடையது. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகங்கள், இன்றும் பல மறு பதிப்புகளைக் காண்கிறது. இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகலாம். அந்த ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி வணங்கும், அவரை மதிக்கும் கோடிக் கணக்கான வாசகர்களில் ஒருவனான அடியேன்.

Jun 12, 2007 - அஞ்சலி

Protected: தந்தையர் தினம்

தந்தையர் தினம் – Father’s Day உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் ஜூன் 17 ஆம் தேதி வருகிறது. நம் வீட்டிற்கு ஒரு தந்தையர் தினத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நம் அப்பா பிறந்த ஜூன் 15 ஆம் தேதியை வைத்துக் கொள்ளலாமே ? 1. எதற்காகக் கொண்டாட வேண்டும்? நாம் நம் அப்பாவின் மீது கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் நம் சந்ததிகள் உணர்ந்து கொள்ள. 2. எப்படிக் கொண்டாட வேண்டும் ? இது மகிழ்ச்சியாய்க் […]

Aug 17, 2006 - அஞ்சலி

அப்பா யு ஆர் கிரேட்

அப்பா யு ஆர் கிரேட்… உங்களுடைய அப்பா உங்களுக்கு கொடுத்தது பெயருக்கு முன்னால் ஒரு இனிஷியல்… எங்களுக்கு நீங்கள் கொடுத்தது, பெயருக்கு பின்னாலும் இரண்டு எழுத்து…B.E பட்டம் அப்பா யு ஆர் கிரேட்… உங்களைப் பள்ளியில் சேர்க்கவோ, படிக்க வைக்கவோ ஒருவரும் உதவியதில்லை… ஒவ்வொரு நிலையிலும் எங்கள் படிப்புக்கு நீங்கள் காட்டிய அக்கறை தானே எங்களைப் படிக்க வைத்தது… அப்பா யு ஆர் கிரேட்… உங்களுக்கு என்று உதாரண புருஷர்கள் யாரும் ஊரில் இல்லை… ஆபிஸ் முடிந்ததும் […]