Posts from the 'என்னவென்று சொல்வது' Category

தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கிறுக்கல்ஸ்.காம் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் ஒரு கதை இப்படிப் போகிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி […]

"நான் கடவுள்" – எப்போ ரிலீஸ்?

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”. இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான். எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும். சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் […]

சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி

சிறில் அலெக்ஸ் மீண்டும் ஒரு சிறுகதைப் போட்டியைத் தொடங்கி இருக்கிறார். இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி. அவசியம் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் நானும் வருகிறேன்.

எனக்குத் தெரிந்த தமிழ்ப் பட இயக்குனர்

வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர். பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார். படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் உருவாகும் கதையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி. படியுங்கள் : அருண் வைத்யநாதன் On அச்சமுண்டு அச்சமுண்டு. ஒரே ஓர் உபரித் […]

இன்று பிறந்த நாள் – இசையராஜா

இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள் இசைஞானி திரு.இளையராஜா விற்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில. 1. கானா பிரபு – சில பாடல்களோடு 2. உன் இசை மீது ஒரு காதல்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் உளங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள். என் மகள் பிறந்த போது, என் மனைவி அருகில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உலகத்தின் எல்லா தாயும் [என்னுடைய மற்றும் உங்களுடைய] வணக்கத்திற்குரியவர்கள். அன்னையர் தினத்திற்கான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது. இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார். அது இப்போது இங்கே உங்களுக்காக !

Pages:12»