Posts from the 'கவிதை' Category

Jul 19, 2014 - கவிதை

மரமண்டைக்கு ஓர் அறிவுரை

எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை. ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, கொஞ்சம் வார்த்தைகளை மடிச்சு மடிச்சு போட்டு, கவிதை மாதிரி செஞ்சு இங்கே பதிஞ்சு வைச்சிட்டு, பக்கத்துலயே உட்கார்ந்து காத்திருக்கிறேன். வருங்காலத்துல இதைக் கவிதைன்னு யாராச்சும் ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலாம் :) — (கவிதைக்காக படத்தை சுட்ட இடம்…Photo Credit.) — தினந்தோறும் இந்த மரத்தடியில் களைப்பாறும் மனிதன் நான். நேற்று மரத்தோடு பேசிய என் உரையாடல் கேளுங்கள்… “மரமே ஏ மரமே […]

நதி எங்கே வளையும் – கரை ரெண்டும் அறியும்

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன். இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல். வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருப்பதை உணர்வீர்கள். பாடலைக் கேட்க கீழே கிளிக்குங்கள். [audio:http://kirukkals.com/wp-content/uploads/2007/05/nathiyengge.mp3] பாடல் வரிகளைப் […]

Feb 25, 2005 - கவிதை

கல்லெறிதல்

தினம் ஒரு கவிதை என்றொரு யாஹு குழு உண்டு…தற்போது முழு மூச்சாக இயங்கவில்லை எனினும் அதில் நான் ரசித்த கவிதைகள் நிறைய உண்டு… அதில் சில கவிதைகளை மீண்டும் பதிப்பிக்கிறேன் உங்களுக்காக. கல்லெறிதல் சாலையைச் செப்பனிடுவதற்காக கொட்டப்பட்ட மணலில் தான் கோவில் கட்டி விளையாடுவோம் கலசத்திற்கு பதிலாக ஒரு கொத்து காட்டாமினுக்கை நட்டுவைப்போம் நடுவிலொரு குழி பிரித்து உருண்டையாய் களி மண்ணைப் பிடித்து கர்ப்பக் கிரகம் அமைப்போம். காகிதப் பூவால் அலங்கரித்து கன்னத்தில் போட்டுக் கொள்வோம் சப்புக் […]

எனக்கு நானே ஞாபகப் படுத்திக் கொள்ள

அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள் … இந்த துளியை (பெரும் தமிழ் இணையத்தில் இது ஒரு துளி தானே) இத்துடன் துவக்குகிறேன்… தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நானும் இங்கு வீழ்வேன் என்று […]