Posts from the 'சினிமா விமர்சனம்' Category

அச்சமுண்டு அச்சமுண்டு – ஒரு பார்வை

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தை, திரையரங்கில் சென்று பார்த்தேன்.
வெளியான முதல் நாளிலேயே பார்த்திருக்க வேண்டியது, எப்படியோ தள்ளித் தள்ளிப் போய், “இன்று இப்படம் கடைசி” என்று தெரிந்தபிறகு கடைசி நாளில், குடும்பத்துடன் சென்று அமர்ந்தேன்.
இயக்குநர் எனக்குத் தெரிந்தவர் என்றாலும்,சமநிலையில் இருந்து இந்தத் திரைப்படத்தைக் குறித்த என் பார்வையைப் பதிகிறேன்.

நான் கடவுள் – என் எண்ணங்கள்

ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது. நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள். இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள், குறிப்பாக விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களாகவே […]

நான் கடவுள் – இன்னும் சில தினங்களில்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, “நான் கடவுள்” திரைப்படம் இன்னும் சில தினங்களில் [ஃபிப்ரவரி 6 – வெள்ளியன்று] வெளியாகிறது. மற்றவர்களின் விமர்சனம் எதுவும் வெளிவருவதற்கு முன் பார்த்துவிட ஆசை. பார்ப்போம். இப்போதைக்கு இதைப் படியுங்கள். பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

அலிபாபா – திருப்பங்கள் நிறைந்த பாதை

சமீப காலத்திய தமிழ் சினிமா சில வித்யாசமான படங்களைத் தருகிறது. புதிய இயக்குனர்கள் மிகவும் சிரத்தையுடன் கதை சொல்ல வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புதிய இயக்குனர் ‘நீலன் கே சேகர்’ என்பவரின் படம் தான் “அலிபாபா”. திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, படத்தின் விறுவிறுப்பு, பிரகாஷ்ராஜின் நடிப்பு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நாயகன் கிருஷ்ணாவின் நடிப்பு [ஏற்கெனவே அஞ்சலி படத்தில் வரும் குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர்] என படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாய் உள்ளது. வித்யாசாகர் இசையில் பாடல்கள் […]

சுப்ரமணியபுரம் – ஒரு பார்வை [Subramaniapuram – A View]

நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன். தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். “சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார் “சுப்ரமணியபுரம்” – சசிகுமார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய முகங்கள், படத்தின் எதார்த்தமான பின்னணிக்கு மிகவும் உதவுகிறார்கள். இயக்குனர் சசிகுமார், “பரமன்” […]

குசேலன் – விமர்சனம்

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம். அதற்குப் பிறகு இன்று தான், கணினியின் முன் அமரும் வாய்ப்பு வந்தது. அதற்குள் படம் ஒரு குப்பை என்கிற விமர்சனம் இணையம் முழுக்க எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி. “அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது. படம் முழுக்க காமெடி நடிகர்கள் […]

அறை எண் 305-ல் கடவுள்

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் வழங்கும் இரண்டாவது படைப்பு. முதல் படைப்பான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”யின் வெற்றி, இந்தப் படத்தின் மீது சற்றே எதிர்பார்ப்பைத் தூண்டி இருந்தது. படத்தின் தலைப்பு, கஞ்சா கருப்பு, சந்தானம் எல்லாம் சேர்ந்து இது ஒரு முழு நீள காமெடிப் படம் என்று தோன்ற வைத்தது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. இயக்குனருக்குப் பல விதமான விஷயங்களில், கருத்து கூறும் ஆர்வம் இருக்கிறது என்பது ஒன்று மட்டுமே தெரிகிறது. படம் […]

நேபாளி – திரை விமர்சனம் [Nepali – Movie Review]

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில், சற்றே கனமான திரைப்படம். இத்தனைக்கும், இயக்குனர் V.Z.துரை, கசப்பான மருந்தை இனிப்பு கலந்து கொடுப்பது போல, ஒரு சீரியஸ் விஷயத்தை, காதல் கலாட்டா, துப்பறியும் போலீஸ் என dilute செய்து தான் கொடுத்து இருக்கிறார் படத்தின் பலம்: தொய்வில்லாத திரைக்கதை படத்தின் தொடக்கத்திலேயே மூன்று ‘பரத்’ களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். அதிகக் குழப்பமில்லாமல், காட்சிகள் விரிகின்றன. சில காட்சிகள் [Original நேபாளி சிறைப் படுத்தப் படுவதற்கான காரணம், “அன்னையா” யார் என்பது […]