Posts from the 'பிடித்த பாடல்' Category

குளிர் மழை காக்க – kulir mazhai kaakka

Kulir Mazhai Kaakka – குளிர் மழை காக்க

குளிர் மழை காக்கக் குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாளி….

நாடிய பொருள் கை கூடும் [naadiya porul kai koodum]

நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…

ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு [aayiram aayiram gopiyargalodu]

சமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் என் கண்ணில் பட்டது.
பாம்பே ஜெயஸ்ரீயின் ரசிகன் ஆனதால் அவர் பாடிய இந்தப் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன்.

கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்

அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் இசையத்துப் பாடல்கள் எழுதி, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள். இப்பவும் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இன்றும் நெஞ்சில்.

காதல் என் வாழ்வில் – ரவி, ஹரி, சூப்பர் சிங்கர் 2008

சில வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 2008 [Super Singer 2008] நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப் பாடலை போட்டியில் பங்கேற்றுக் கொண்டிருந்த, ரவி மற்றும் ஹரி [சகோதரர்கள்] பாடத் தொடங்க, ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். What an excellent Composition!!! இந்தப் பாடல், அவர்களே இயற்றி இசையமைத்த பாடல் என்பது தெரியாமல், உடனே இணைய வலையில் போய் “காதல் என் வாழ்வில்” என்று தேடிக் கொண்டிருந்தேன். ஒன்றும் அகப்படவில்லை. [ஒருவேளை […]

"பூ" – படத்தின் பாடல்கள்

எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது. இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும். இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப் பாடகர்களால் பாடப்பட்ட “ச்சூ ச்சூ மாரி” இரண்டு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ [kanden seethaiyai]

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல். பாடல் : கண்டேன் சீதையை பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர் இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com ராகம்: பாகேஸ்ரீ [Bageshri] தாளம்: ஆதி [திஸ்ர நடை] அனுமன் இலங்கை சென்று, சீதையைக் கண்டு திரும்பி வந்து ராமனிடம் சொல்வதைச் சொல்லும் பாடல். அனுமனின் வரவுக்கும், அவர் சொல்லப் போகும் செய்திக்குமாய், ராமனும் மற்றவர்களும் […]

எப்படி மனம் துணிந்ததோ- பாம்பே ஜெயஸ்ரீ

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன். இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம். பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho] இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர் பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ ராகம்: ஹுசைனி இசைத்தொகுப்பு: அமிர்தம் ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப தசரதன் முடிவு செய்துவிட, “நான் சென்று வருகிறேன்” என சீதையிடம் விடைபெற விழைகிறான் ராமன். அதற்கு சீதையின் பதிலாக வருகிறது […]

யுவன் இசையில் ராஜா பாடிய பாடல்கள்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை. “எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா “நம்ம காட்டுல மழ பெய்யுது” – பட்டியல் “அறியாத வயசு, புரியாத மனசு” – பருத்திவீரன் “பறவையே எங்கு இருக்கிறாய்?” – கற்றது தமிழ் எல்லாப் பாடல்களையும் […]

Pages:123»