Posts from the 'பிடித்த பாடல்' Category

"நான் கடவுள்" – எப்போ ரிலீஸ்?

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”. இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான். எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும். சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் […]

கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம். பாடல் : கண்கள் இரண்டால். ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம். எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை” பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ். […]

தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல். ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல். பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு, காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல். முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே […]

ராஜா-வின் முதல் பாடல்

ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும். ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா? அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே? :) அதான் இல்லை. என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார். அப்போ இந்தியாவின் பிரதமரா இருந்த “ஜவஹர்லால் நேரு” இறந்து விட்ட சமயம். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கண்ணதாசன் பாடல் […]

கை வீணையை ஏந்தும் கலைவாணியே…

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது. சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும். நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993 அல்லது 1994ஆம் வருடம். அப்பொழுதுதான் முதன்முறை இந்தப் பாடலைக் கேட்டோம். கேட்டவுடனே மனதை மயக்கும் ஒரு தெய்வீகத் தன்மை அதில் […]

சமீபத்தில் ரசித்த பாடல்கள்

“ஏம்பா லேட்டஸ்ட்டா எத்தனையோ பாட்டு வந்துகிட்டு இருக்கே, அதுல உனக்கு பிடிச்ச பாட்டு பத்தி எழுதலாமுல்ல ?” என்று நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட பல பேருக்காக என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், லிஸ்ட்டுக்குப் போயிடுறேன். பாடல் – குரல் – இசை – படம் என்ற வரிசையில் படிக்கவும். 1. காற்றின் மொழி – பலராம் – வித்யாசாகர் – மொழி. 2. சஹானா தூரல் – உதித் நாராயண், சின்மயி. – ஏ.ஆர்.ரகுமான் – சிவாஜி 3. […]

நதி எங்கே வளையும் – கரை ரெண்டும் அறியும்

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன். இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல். வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருப்பதை உணர்வீர்கள். பாடலைக் கேட்க கீழே கிளிக்குங்கள். [audio:http://kirukkals.com/wp-content/uploads/2007/05/nathiyengge.mp3] பாடல் வரிகளைப் […]

காற்றில் வரும் கீதமே…

ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன். அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்…. சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ… இசை : தலைவர் இளையராஜா பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும். என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள். ஒரு இசைக் குடும்பத்தைக் […]

2005 – சில நினைவுகள் – பகுதி 1

இதோ வந்துவிட்டது 2006. அதே போல இந்த வருடத்தை நினைவு கூர்வதற்கும் இது சரியான நேரம் தானே ? இந்த வருடத்தில் என் மனம் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இப்போது பேசுவோம். பிடித்த மற்றவை பற்றி அடுத்த பதிவில். 5. ஐயங்காரு வீட்டு அழகே படம்: அன்னியன் பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி இசை: ஹாரிஸ் ஜெயராஜ் கேளுங்களேன் 4.மயிலிறகே மயிலறகே படம்: அன்பே ஆருயிரே பாடியவர்கள்: மதுஷ்ரி, நரேஷ் ஐயர் இசை: A.R.ரெஹ்மான் கேளுங்களேன் 3.காற்றில் […]

வானத்தின் மேல் நின்று

(குமாரின் பயணம் தொடர்கிறது..) குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை… ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு… இது அவனுக்கே அவனுக்கான நேரம்… அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்.. சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும். சில பாடல்கள் மகிழ வைக்கும், சில அவனை நெகிழ வைக்கும், சில அவன் மூளையைத் துளைக்கும், (இது என்ன ராகமோ என்று) மற்றும் சிலவோ அவன் இதயத்தை. […]

Pages:«123»