இது தந்தையின் தாலாட்டு (A Father’s Lullaby)
சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது. மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன். கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது. “தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின் மெட்டில், அவரே வேறு வரிகளை அமைத்துப் பாடியிருந்தார். ஏழேழு கடல் கடந்து இங்கு வந்து வாழ்பவரே என்றென்றும் உனக்கெனவே இசை [...]