எனக்குத் தெரிந்த தமிழ்ப் பட இயக்குனர்

வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர்.
பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் உருவாகும் கதையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
படியுங்கள் : அருண் வைத்யநாதன் On அச்சமுண்டு அச்சமுண்டு.
ஒரே ஓர் உபரித் தகவல் : வலைப்பூ வடிவமைப்பு செய்தது அடியேனும் என் மனைவியும் :)

Tags: ,

3 Comments

 • வணக்கம்

  ஒரு சின்னப் பெரிய தப்பிருக்குது பதிவில்.. அருண் வைத்தியனாதன் எடுக்கும் படத்தின் பெயர் ‘அச்சமுண்டு அச்சமுண்டு” :)

  அன்புடன்
  கீதா

 • அட…
  பிழையுண்டு பிழையுண்டு
  என்று சுட்டிக் காட்டியமைக்கு
  “நன்றியுண்டு நன்றியுண்டு”.

  சதீஷ்.

 • […] இயக்குநர் எனக்குத் தெரிந்தவர் என்றாலும்,சமநிலையில் இருந்து இந்தத் திரைப்படத்தைக் குறித்த என் பார்வையைப் பதிகிறேன். […]

Got anything to say? Go ahead and leave a comment!