கே.ஜே.யேசுதாஸ் – தமிழ் சினிமா இசையில், தலைவர் ராஜா சார் மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் பல நல்ல பாடல்கள் இவர் குரல் வழி வந்து இருக்கின்றன.
“கண்ணே கலைமானே”, “அம்மா என்றழைக்காத”, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”, “மனிதா மனிதா இனி உன் விழிகள்”, என சொல்லிக் கொண்டே போகலாம்.
“ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது”
இவர் பாடிய “ஏழிசை கீதமே” என்ற பாடலின் வரிகள் இவை.
சமீபத்தில் இவரது ரசிகர் ஒருவரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தது. நீங்களும் படித்து ரசியுங்கள்.
ஜேசுதாஸின் குரல் கம்பீரமும் இனிமையும் கலந்த அற்புதம்.
வணக்கம்.
யேசுதாஸின் அந்த வலைப்பூ நானும், எனது நண்பர் நிஜமா நல்லவனும் சேர்ந்துதான்
தொடுத்து வருகிறோம்.
அதைச் சுட்டி காட்டி பதிவு போட்டதற்கு மிக்க நன்றி.
அடிக்கடி கானகந்தர்வனின் வலைப்பூவிற்கு வந்து அவரது இசை மழையில் நனைய அழைக்கிறோம்