சமீபத்திய என் கர்நாடக இசைத் தேடலில் ரஞ்சனி & காயத்ரி சகோதரிகள் பாடிய சில விருத்தங்கள் என் காதில் பட்டது.
கேட்ட பிறகு இந்தப் பாடலை எழுதியது யார் என்று தேடி, இது கம்ப ராமாயணத்தில் இருந்து வருவது என் கண்ணில் பட்டது (நன்றி: R. பிரபு).
நான் கண்டதையும் கேட்டதையும் எழுதத் தானே இந்த கிறுக்கல்கள் தளமே!
நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே
காணொளி இங்கே.
சுருக் அர்த்தம் என்னவென்றால்,
பல அரக்கர்களின் சேனையை அழித்து சாம்பலாக்கி, வெற்றி வாகை சூடிய ராமனின் தோளின் வலிமையைப் பாடுபவர்க்கு, நினைத்த பொருள் கிடைக்கும், ஞானம், புகழ் உண்டாகும். அவரது வீடு நன்றாக இருக்கும். லக்ஷ்மியின் அருள் பார்வை கிடைக்கும்.
கமலை – லக்ஷ்மியை
வாகை – என்பது ஒரு மலர், வெற்றி பெற்றவர்களின் தோள்களில் மாலையாவது.
நீறு – சாம்பல்.
ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், ராகத்தையும் பாவத்தையும் தமிழ் உச்சரிப்பையும் சிதைக்காமல் பாடுவது நம் காதுகள் செய்த புண்ணியம்.
இந்த விருத்தத்தில் சிறிது நேரம் சஞ்சாரித்துவிட்டு, அடுத்த விருத்தத்தைத் தொடங்குகிறார்கள்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…
பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. மிக எளிமையான வரிகள். இதுவும் கம்ப ராமாயணத்தில் இருந்து வருகிறது.
“ராமா” என்ற இரண்டெழுத்தை மட்டும் இவர்கள் பாடுவதைக் கேளுங்கள்.
[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/09/ViruthamFollowedByRamaNamame.mp3″ title=”ரஞ்சனி காயத்ரி விருத்தம் – ராம நாமமே”]
Bilahari brought tears in my ‘madras’ eyes. 🙂
and the strange thing is, you picked up the madras eye from swamimalai. 🙂
actually i liked the “jenmamum maranamum” line in ‘desh’. may be the simple but powerful lyrics of kambar made it.
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…
What a powerful lyric by Kambar. Mellifluously sung in Desh – brought tears in my ears. This is the route to Salvation. Great man think alike. In Bhaja Govindam – Adi sankara says the same – Iha samsare bahu dustare, Krupaya Paare Paahi Murare.
Rama nama mahimayai idhai vida arputhamaai eduthuraikka mudiyaadhu.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே. ‘தீமையும்’-னு இருக்கு!
ஓ…இதோ சரி செய்துவிடுகிறேன். நன்றி.
ராமன் தோள் வலி கூறுவோர்க்கே-ன்னே சொல்லாம ‘சிலையிராமன் தோள் வலி கூறுவோர்க்கே’ ஏன்னு தெரியல!!
சிலை – ன்னா Statue -ன்னு அர்த்தம் இல்லைன்னு நினைக்கிறேன்…வேற என்ன அர்த்தம்ன்னு தமிழறிஞர் யாரையாச்சும் கேட்கணும்.
வெண்பா அல்லது விருத்தம் என்பதற்கான இலக்கணப்படி இத்தனை வார்த்தைகள் இருக்கணும் அப்படின்னும் எழுதியிருக்கலாம்…
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா ஞாபகம் இருக்கா?
“சிலை – ன்னா Statue -ன்னு அர்த்தம்” – thats right.. may be they used it here so as to say tht Lord Rama is as beautiful/perfect as a statue…
சிலை எனில் வில் என்றொரு பொருள் உண்டு நம் தமிழ் மொழியில்…. கம்பர் வில்லோடு இருக்கும் ராமனை குறிக்க சிலையிராமன் என்ற பதத்தினை உபயோகிக்கிறார்இங்கே…..
நன்றி அனந்த கிருஷ்ணன், இது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
சிலை [ cilai ] , sound , resound , roar , ஒலி ; 2 . beat as a drum ; 3 . be angry , கோபி ; 4 . retreat , பின்வாங்கு .
சிலை [ cilai ] , stone , கல் ; 2 . a statue of stone , an image , விக்கிரகம் ; 3 . a kind of arsenic , பாஷாணம் ; 4 . a hill , a mountain .
சிலை [ cilai ] , sound , ஒலி ; 2 . a bow , வில் ; 3 . Sagittarius of the Zodiac , தனுர்ராசி ; 4 . tail வால் ; 5 . the 19th lunar asterism ; 6 . a species of tree , ஓர்மரம் ; 7 . rainbow .
Thanks to
http://www.dictionary.tamilcube.com/index.aspx
அப்போ சிலைராமன் = வில்லேந்திய ராமன். சரியா இருக்கும்னு நமக்குத் தெரியுது.
ஆனா எத்தனை பேர், சிலைக்கு Statue என்று அர்த்தம் எடுத்துக்கிட்டு அபிநயம் பிடிக்கப் போறாங்களோ, யாருக்குத் தெரியும்?.
அந்த சிலையிராமனுக்கே வெளிச்சம்….:)
Wet eyes one more time!!
‘silai’ means statue. A carved statue is always beautiful, otherwise the sculptor would perhaps destroy it! If you see ‘silai’ in temples or other places, they are carved to perfection. So here it means Rama is handsome like a ‘silai’ and whoever sings or praises his glory – ‘Tol vali’ : vali means valimai i.e. Rama’s ‘parakramam”! Silai ponru azhagudaiya Ramanin ‘tol-vlimai’ or pugazh kooruvorkke
Thanks N B…
Thanks a lot for great translation. first time hearing silai means villu also.
Desh brought tears. RG’s voice is as divine as MS Amma.
துணையும், தொழும்தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
அபிராமி அந்தாதி…..
இங்கு அம்பிகையின் கையில் கரும்பு வில் கருப்புச்சிலை என குறிப்பிடப்படுகிறது
அறிஞர்கள் வியாக்கியானம் கூறுகையில் , கரும்பில் உள்ள மெல்லின மகரம் , அம்பிகையின் மென் கையால் பிடிக்கும் போது கருப்பு என வல்லின பகரமாகியது என்று கூறுவர் .
நன்றி கடம் சுரேஷ் அவர்களே.
கற்றா கல்வியும் என்ற் விருத்தத்தின் முழுவரிகளையு தெரிய ஆவலாக உள்ளேன்.
ம்ற்றும் அது யாரால் இயாற்றப்பட்டது?
நன்றி M.K.Natarajan. Please see the next comment by Aparna.
Pls listen to The mentioned viruttam by Ranjani Gayathri
Katra Kalviyum, Veetra padhaviyum, EEttiya dhanamum, Utra thunayum, Petra magavum, matra suttramum, sutra vizhum kaalan kayittrukku udhavumo…Thetri arula sattru ninai sivanai …nambi kettavar evaraiya….
Thanks Aparna. I will write about it soon.
This virutham is being sung by a small kid. check this video in YouTube.