சமீபத்தில் விருத்தங்கள் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டதில், சில தேடல்களைத் தொடர்ந்தேன்.
அப்போது தான், ரஞ்சனி காயத்ரி பாடிய “குளிர் மழை காக்க” என்கிற இந்த விருத்தம் காதில் பட்டது.
நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
[haiku url=”/wp-content/uploads/2010/10/kulir-mazhai-kaatha.mp3″ title=”குளிர் மழை காக்க”]
குளிர் மழை காக்கக் குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாலி….
பொருள்:
ஓரளவுக்கு எளிமையான பாடல் தான்.
குளிர் மழையில் இருந்து மக்களைக் காப்பதற்காக, கோவர்த்தன மலையைக் கைகளில் தூக்கி நிறுத்தியவனே,
த்ரௌபதியின் மானம் காக்க, ஆடை கொடுத்து உதவியனே,
முதலையிடம் மாட்டிக் கொண்டு பிளிறிய ஆண்யானையின் குரலைக் கேட்டு ஓடிப் போய் காப்பாற்றியவனே
என்னையும் வளர்த்து அருள்செய்.
தமிழ் உச்சரிப்புக்காகவே ரஞ்சனி காயத்ரியைப் பாராட்டலாம். கேட்டு மகிழுங்கள்.
நன்றி:
ஜீவா வெங்கட்ராமனின் பதிவு, இதே பாடலைப் பற்றி
rasikas.org
bollywood-mp3.com
Play aagalappa.
Thanks for reporting. I fixed it just now.
சதீஷ்,
பரிபாலி – இடையன ‘ல’ இருக்க வேண்டும்…
நன்றிகள்,
ஜீவா
நன்றி ஜீவா, திருத்திவிட்டேன்.
Beautiful…thanks !!