வெளிநாட்டில் வாழ்க்கை சொகுசாய் இருப்பது போல் தோன்றும்.
ஆனால் ஓர் இழப்போ துக்கமோ வரும் வேளையில் சேர்ந்து அழ ஆளில்லாமல் துவளும்போது தெரியும் வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள வலி.
நான் இந்த வலியை உணர்ந்தும் இருக்கிறேன், ஆனால் தெளிவாக இந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முயன்றதில்லை.
அதை கீதா ரவிச்சந்திரன் என்பவர் தனது இழப்பு என்கிற பதிவில் செய்திருக்கிறார்.
இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?
நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை. மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்?
நண்பர் சதீஷ் அவர்களுக்கு,
தங்கள் வலைப்பூவை ரசிக்கும் வாய்ப்பு இன்றெனக்கு வாய்த்தது…. வெளிநாட்டு வாழ்க்கை மட்டுமல்ல வலி தருவது…. வெளிமாநில வாழ்கையும் கூட பல நேரங்களில் வலி தரும்…. பல்வேறு தருணங்களில் வாழ்வு தரும் வலியினை உணர்ந்திருக்கிறேன் நான்… நிச்சயம் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்…. நான் சென்னைவாசி… இப்போதிருப்பது ஹைதராபாதில்…. ஒரு இரவு பயணத்தில் சென்னைக்கு சென்றிடலாம் என்றாலும், பலநேரம் நம் பணிச்சுமை காரணமாக ஏதேனும் விடுமுறை வருமா, அதோடு மேலும் ஓரிரு நாள் விடுப்பெடுத்து போக திட்டம் தீட்டி போக நேரிடும்…. ஆனால் இடைப்பட்ட நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் ரணமாய் கழியும்…..
ஆயினும் வாழ்வு தரும் அத்தகைய வழிகள் நமக்கு நல்ல பாடங்களை கற்றுத்தரும் என்பது எனது கருத்து.
அன்புடன்
ஆனந்த கிருஷ்ணன். ஞா
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஆனந்த கிருஷ்ணன். மீண்டும் வருக.
Ya its true…