ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது.
நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள்.
இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்,
குறிப்பாக
- விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி
- மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை
- படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை
- ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு
- கதாபாத்திரங்களாகவே மாறிவிட்ட நடிகர்கள் பூஜா, கோவை கிருஷ்ணமூர்த்தி[‘முருகன்’ கதாபாத்திரம்], அறிமுக நடிகர் ராஜேந்திரன் [வில்லன் கதாபாத்திரம்]
என சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம்.
நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.
Continue reading “நான் கடவுள் – என் எண்ணங்கள்”