வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர்.
பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் உருவாகும் கதையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
படியுங்கள் : அருண் வைத்யநாதன் On அச்சமுண்டு அச்சமுண்டு.
ஒரே ஓர் உபரித் தகவல் : வலைப்பூ வடிவமைப்பு செய்தது அடியேனும் என் மனைவியும் 🙂