சமீப காலத்தில் வந்த நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் என்னை பாதித்த திரைப்படங்களில் ஒன்று ‘கல்லூரி’.
சேவியர் தன்னுடைய வலைப்பதிவில், பாலு மகேந்திரா கூறியதாக எழுதி இருந்தார்.
பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த அந்த மாணவிகளின் ஓலத்தை இப்படி வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது சரியல்ல என்று குறிப்பிட்டார்.
இது சுத்த அபத்தமாய்ப் படுகிறது எனக்கு. கல்லூரி திரைப்படம் என்னவோ ஒரு மசாலா படம் என்கிற மாதிரியான பேச்சில் ஒரு துளியும் உண்மையில்லை. படம் பார்த்தவர்களுக்கு நிச்சயமாய் அது புரியும்.
ஒரு கொடூர சம்பவத்திற்குப் பின்னால் எத்தனை விதமான கனவுகள், லட்சியங்கள், உணர்வுகள் அழிந்து போயிருக்கும் என்பதையும், அதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையையும் மிக நுட்பமாய்ச் சொல்லும் படம் “கல்லூரி”.
ஆடல் பாடல் எல்லாம் இருக்கிறது படத்தில், ஆனால் அது எதுவும் மலிவான உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள் அல்ல.
வியாபார நோக்கத்தில் ஆடல், பாடலா ? பார்க்க “அழகிய தமிழ் மகன்”.
பாலாஜி சக்திவேலைக் கொஞ்சம் விடுங்கப்பா, இன்னும் பல நல்ல படங்கள் வர வேண்டி இருக்கு !
பாலுவின் கருத்தை உள்நோக்கம் கற்பிக்காமல் அணுகினால் அதில் நேர்மை இருக்கலாம். அந்த நேர்மையால் தமிழ் சமூகத்திற்கும், சினிமாவிற்கும் நண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏற்கனவே தெரிவித்த எனது கருத்து கீழே.
பாலுமகேந்திராவின் கருத்து மிக முட்டாள்தனமாக எனக்கு படுகிறது. கலை, இலக்கியம் குறித்த எந்தவித நவீன புரிதலும் இல்லாமல், இன்னும் பழைய ஸ்டீரியோபாணி (முற்போக்காக தோற்றமளிக்கும்) கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அவர் பார்வையை இன்னும் நீட்டிப் பார்த்தோமானால், தருமபுரி நிகழ்சியை பத்திரிகையில் ரிப்போர்ட் செய்வது கூட ஒரு வியாபார உத்தி மட்டுமே. பாலாஜி சக்திவேலின் கல்லூரி, மிக நேர்மையான முறையில் சம்பவத்தை காட்சியாக்கி, பிண்ணணி கதை மூலம் அதை கலையாக்கியிருக்கிறது. பாலு போன்ற தனது பழமைவாத குருவின் வரட்டு சிந்தனைகளை தாண்டி பாலாஜி தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
கல்லூரி திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது. ஒரு கொடூர சம்பவத்தை நாம் ம்றந்து போயிருந்த காலத்தில் நமக்கு நினைவுபடுத்திய படம்.இதன் மூலமாவது அம்மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கட்டும். பாலுமகேந்திராவிற்கு வயதாகிவிட்டது. தங்கள் தமிழ்ப் பதிவை தமிழில் Digg செய்ய http://www.Tamigg.comல் சேர்க்கவும்
கல்லூரி திரைப்படம் – பாலு மகேந்திரா கருத்து – என் பார்வை
என்னை பொறுத்த வரை இந்த படத்தை எடுத்தவர் காதல் பட இயக்குனர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இவருடைய முந்தய படத்தின் திரைக்கதைக்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒற்றுமையே கிடையாது. ஒற்றுமை என்றால் அந்த படத்தில் இருந்த தெளிவு இந்த படத்தில் இல்லை,அவருக்கே தெரியவில்லை கதையை எப்படி இயக்குவதென்று. என்னை பொறுத்தவரை இந்த படம் என்னை துளியும் ரசிக்க வைக்க வில்லை… அவர் எந்த கருத்தை ஆணி தரமாக சொல்ல வந்தார் என்பதும் எனக்கு புரியவில்லை… நமது இயக்குனர் பாலு மகேந்த்ரவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்…
நன்றி
அன்புடன் வினோத்
i was a student in dharmapuri while the girls were burnt . i went with some people to see that bus and to rescue but it went in vain. already the girls in the bus was died and we could not save them. we cried lot there. after watching that movie college days came to my eyes.
dont tell Balu mahendra as fool
i will be happy if they have taken as a Documentory.In tamil nadu only bluddy cinema peoples making everything as fantacy.You cant see a mainstream Bengal movie contains NANDIGRAM ISSUE.i watched that same issue in the form of : theatre PLAY,a documentory and a Short film.
we foolish people are thinking mainstream cinema is the only source of entertaining,communication.i strongly condomn rosavasanth’s comments.
prabhuraj,
I see what you are trying to convey, but if you have seen this movie once, you will understand that “making money” was not the motive in making this movie.
“Kalluri” made us understand how many dreams may have been killed by that incident. It was a very touching movie.
dharmapuri incident should be forgetten but still they are remembering through “kallauri”
cinema and it has commercialised and point of view the real fact has known to director
their is no solution for that incident (dharmapuri) .
dir.balu statement i accepted
தர்மபுரியில் மூன்று பெண்கள் எரிக்கப்பட்ட போது… இயக்குனர் ரா. பார்த்திபன் ஒரு கவிதை எழுதினார், “த்ரீ ரோஸஸ் “- கவிதையின் தலைப்பு. கவிதை நினைவில்லை… அதன் அர்த்தம் இது தான்…” வேண்டுமானால் குற்றம் செய்பவரை தண்டிக்க சொல்லும் புத்தகங்களை எரித்துவிடுங்கள்… அப்பாவிகளை அல்ல.” அதே ஆதங்கத்தை தான் “கல்லூரி” திரைப்படமும் வெளிப்படுத்துகிறது. கல்லூரி மாணவர்களின் உலகம் வேறு. அவர்கள் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் ஆகியவை எந்த விதத்திலும் அந்த அரசியல்வாதிகளுடன் தொடர்புடையது அல்ல. அவர்கள் சந்தித்து கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. அப்படியிருக்கும் போது சில குண்டர்கள், குடித்து விட்டு, பேருந்தை எரிப்பது என்பது மனித உருவில் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தானே காட்டுகிறது….? இதை பதிவு செய்ய வேண்டியது ஒரு கலைஞனின் கடமையல்லவா? இதை பார்த்தாவது மனித இனம் தன் காட்டு மிராண்டி வழிகளை கை விடாதா என்கிற ஏக்கம் தான் அந்த திரைப்படம். இது புரியவில்லை என்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், “நம் மகளோ… தங்கையோ அந்த பேரூந்தில் இருந்திருந்தால்… நாம் யார் மீது கோபப்படுவோம், என்பதை சிந்தித்து பாருங்கள்…” பாலாஜி சக்திவேல் எதையும் சொல்லவில்லை, ஒரு சம்பவத்தை நமக்கு படம்பிடித்து காட்டுகிறார்…அது உங்கள் மனசாட்சியை உலுக்காவிட்டால் அது அவர் குற்றமல்ல. பாலுமகேந்த்ரா இதை புரிந்து கொள்ள வேண்டும்…ஆவணப் படமாக எடுத்தால் எத்தனை பேர் பார்ப்பார்கள்..?