6

சுஜாதாவின் பார்வையில்…சிறுகதை என்பது

சுஜாதா எழுதிய “சிறுகதை பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்கிற கட்டுரையைப் படித்தேன். அதில் இருந்து ஒரு துளித் தேன் இங்கே. இனி அவ்வபோது இது போன்ற விஷயங்களைப் பதிய முனைகிறேன்.

சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதி தான் அதற்கு.
சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. A short fictional narrative in prose. வேறு எந்த வரையறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.


கதையை எப்படி சொல்ல வேண்டும்?
கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவும் இருக்காதே?
இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம் தான் எனக்குத் தெரிந்து. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையல்ல. பஸ் டிக்கட்.
ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருஷம் கழித்தோ, ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.

முழுவதுமாய்ப் படிக்க, இந்த PDF -ஐப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

sadish

6 Comments

  1. sujathavin rasigarhal elleme avarai patri eluthi eluthi thangaludaya atramayayai ,avarudaya izhlaipai theerthu kolkirom

  2. நன்றி உமா.
    நிச்சயமாய்.
    அவர் ஏற்கெனவே எழுதிய விஷயங்களை முழுதாய்ப் படிக்கவே இன்னும் நிறைய காலம் ஆகும். எழுத்துக்கள் மூலம் என்றும் அவர் வாழ்வார்.

  3. ஓவ்வொரு முறையும், விகடனில் கற்றதும் பெற்றதும், வரும் அவர் மரணம் ஒரு கெட்ட கனவு, மனம் நினைக்க ஏங்குகிறது, மூளை நம்ப மறுக்கிறது.

  4. சுஜாதா சாரோட மரணம் எத்தனையோ பேர எவ்வளவோ பாதிச்சிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் அவங்ககூட நெருங்கிப் பழகின ஒருத்தரை இழந்த சோகம். அவர் இல்லாத வெறுமை. 🙁

  5. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையல்ல. பஸ் டிக்கட்.
    — thats sujatha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *