சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில், சற்றே கனமான திரைப்படம்.
இத்தனைக்கும், இயக்குனர் V.Z.துரை, கசப்பான மருந்தை இனிப்பு கலந்து கொடுப்பது போல, ஒரு சீரியஸ் விஷயத்தை, காதல் கலாட்டா, துப்பறியும் போலீஸ் என dilute செய்து தான் கொடுத்து இருக்கிறார்
படத்தின் பலம்:
தொய்வில்லாத திரைக்கதை
படத்தின் தொடக்கத்திலேயே மூன்று ‘பரத்’ களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள்.
அதிகக் குழப்பமில்லாமல், காட்சிகள் விரிகின்றன. சில காட்சிகள் [Original நேபாளி சிறைப் படுத்தப் படுவதற்கான காரணம், “அன்னையா” யார் என்பது போன்ற], ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் போகப் போகப் பிடிபடுகிறது. பரத், மீரா ஜாஸ்மின் இடையே நடக்கும் ஆரம்ப கால கலாட்டாக்களில் குறும்பு, ரசிக்க முடிகிறது.
பரத்
கமல், விக்ரம் வரிசையில் இடம் பிடிக்க, பரத் முயற்சி செய்கிறார். மூன்று வேடங்களிலும் தன் உடலை வருத்தி உழைத்திருக்கிறார்.
பின்னணி இசை
கதையை, சிச்சுவேஷனை [இதற்குத் தமிழில் என்னப்பா?] உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
பலவீனங்கள்
பாடல்கள்
இயக்குனர் கொஞ்சம் பாடல்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். இவரது முந்தைய படங்களான முகவரி, தொட்டி ஜெயா போன்ற படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட். இந்தப் படத்தில் catchy ஆக எந்த பாடலும் இல்லை.
மற்றவை
படம் வயது வந்தவர்களுக்கானது. சில காட்சிகள் நெஞ்சை உலுக்குவது போல் உள்ளது. பலவீனமான இதயத்தினர், பக்கத்து தியேட்டரில் “சந்தோஷ் சுப்ரமணியம்” பார்க்கலாம்.
மதிப்பெண்
கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55% [45 எடுத்தால் Pass]
—
திரை விமர்சனம் எழுதுவதில் இது என் முதல் முயற்சி. உங்கள் கருத்துக்களைக் கீழே கமெண்ட்டுங்கள்.
நல்ல முயற்சி…. பொதுவாக விமர்சனம் என்ற பெயரில் கதையை சொல்லிவிடுவார்கள். அப்படியில்லாமல் விமர்சனம் செய்திருப்பது பலே!!!. ஆனால் கொஞ்சம் கதையின் மேலோட்டத்தை சொல்லலாம்.
55% மதிப்பெண் என்றால் ‘+’ அதிகமாக சொல்லவேண்டும்.
இன்னும் பல படங்களின் விமர்சனங்களை எதிர் நோக்கும்…..
– பிரகாஷ் பாலா
நல்ல முயற்சிதான். ச.போடாதே, அ.த.மகனுக்கு அப்புறம் வந்த படங்களோட பாடல்கள் எதுவுமே மனசுல நின்ன மாதிரி தெரியல.
கதையை, காட்சி அமைப்புகளை உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் -ன்னு சொன்னா பொருந்துமா?
சிச்சுவேஷனுக்கு இணையான தமிழ் வார்த்தையை இன்னும் யோசிச்சிட்டுதான் இருக்கேன்!!
பிரகாஷ்,
கதையின் மேலோட்டம் என்ன, முழுக்கதையுமே சொல்றதுக்கு நம்ம சன் டிவி திரை விமர்சனம் இருக்கே. அதையே ஏன் நாமும் செய்யணும்?
அடுத்த விமர்சனப் பதிவிலே இம்ப்ரூவ் செய்வோம்.
சரவ்.
அ.த.மகன் ன்னா யாருன்னு ரொம்ப குழம்பிப் போய்ட்டேன். அட நம்ம ATM ன்னு சொன்னா புரிஞ்சுக்கப் போறேன்.
காட்சி அமைப்புன்னு சொல்றது நல்லா இருந்தாலும், சிச்சுவேஷன் னு நான் சொன்னா நீங்க என்ன புரிஞ்சுக்கிறீங்களோ, அந்த அர்த்தம் முழுமையா வெளிப்படலை, இல்லையா?
யோசிப்போம்.
படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோன்னு தோணுது…
மீரா ஜாஸ்மினின் நடிப்பு அபாரம். முதலில் மீரா இந்தப் படத்துக்கு ஏன் தேர்ந்தெடுத்தாங்க.. அவங்க பரத்துக்கு கொஞ்சம் வயசானவங்களா தெரிவாங்களேன்னு யோசிச்சேன்.. மீராவின் வயசு கம்மின்னாலும் சீனியர் ஆர்டிஸ்ட் இல்லையா? அதனால் படம் பார்க்கும்போது ஒரு பழைய படம் போல தெரிஞ்சது ஆரம்பத்துல..
ஆனா பின்னி எடுத்துட்டாங்க நடிப்புல. மீரா ஜாஸ்மின் = நடிப்பு + அழகு
அப்புறம் சிச்சுவேஷன் – இந்த வார்த்தைக்கு சூழ்நிலைங்கிறது சரியா இருக்குமோ?
காட்சிச் சூழலுக்கு ஏற்ப இசையமைத்தார், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இசையமைத்தார்.. இப்படி எழுதினா சரியா வருமோ??
அன்புடன்
கீதா