4

எப்படி மனம் துணிந்ததோ- பாம்பே ஜெயஸ்ரீ

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன்.
இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho]
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
ராகம்: ஹுசைனி
இசைத்தொகுப்பு: அமிர்தம்

ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப தசரதன் முடிவு செய்துவிட, “நான் சென்று வருகிறேன்” என சீதையிடம் விடைபெற விழைகிறான் ராமன். அதற்கு சீதையின் பதிலாக வருகிறது இந்தப் பாடல்.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் உணர்வுகளைக் குழைத்து வரும் பாடலைக் கேட்க இங்கே கிளிக்குங்கள்.
அமிர்தம் on ராகா.காம்.

பல்லவி:
எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி!
எப்படி மனம் துணிந்ததோ, சுவாமி?
வனம் போய் வருகிறேன் என்றால்
இதை ஏற்குமோ பூமி?
(எப்படி)
அனுபல்லவி:
எப்பிறப்பிலும் பிரியேன், விடேன் என்று கைதொட்டீரே..(2)
ஏழையான சீதையை நட்டாற்றில் விட்டீரே…(2)
சரணம்:
கரும்பு வில் முறித்தாற் போலே தள்ளாலாச்சுதோ?
ஒரு நாளும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ? (2)
வருந்தி வருந்தி தேவரீர் மெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல (2)
இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ?
என்னை விட்டுப்
பிரிகிறேன் என்று சொல்ல….
(எப்படி மனம் துணிந்ததோ)

sadish

4 Comments

  1. எப்பிறப்பிலும் பிரிய விடேன் (சரியான வார்த்தைகள்)

    கரும்பு முறித்தாற் போலே சொல்ல லாச்சுதோ
    ஒருக் காலும் பிரியேன் என்று சொன்னசொல் போச்சுதோ
    வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல வார்த்தையால் கொல்லாமல் கொல்ல இரும்பு மனது உண்டாச்சு தல்லோ என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல

    The above is the authentic version from aruNAcala kavirayar’s song.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *