7

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ [kanden seethaiyai]

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல்.
Listeners Choice by Bombay Jayashreeபாடல் : கண்டேன் சீதையை
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com
ராகம்: பாகேஸ்ரீ [Bageshri]
தாளம்: ஆதி [திஸ்ர நடை]

அனுமன் இலங்கை சென்று, சீதையைக் கண்டு திரும்பி வந்து ராமனிடம் சொல்வதைச் சொல்லும் பாடல். அனுமனின் வரவுக்கும், அவர் சொல்லப் போகும் செய்திக்குமாய், ராமனும் மற்றவர்களும் ஆவலாய்க் காத்திருக்கின்றனர். அவர்கள் ஆவலை உணர்ந்து, அனுமன் “கண்டேன்” என்ற வார்த்தையை முதலில் சொல்லித் தொடங்குகிறார். இந்தப் பாடலும் இதற்கு முந்தைய பாடலும், அருணாச்சலக் கவிராயர் எழுதிய “ராமநாடகம்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

பல்லவி:
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா….நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா..

அனுபல்லவி:
அண்டரும் காணாத லங்காபுரியில்…(2)
அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவைக்
(கண்டேன்)

சரணம்:
பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப்
பகலோரு யுகமாக் கழித்தாளே பிரயாசி (2)
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர
சீச்சி நில்லடா என்று ஏசி… (2)
தனித்து தன் உயிர் தன்னை தாங்கிட மகராசி (2)
சாரும்போதே
நானும் சமயம் ஈதே வாசி
இனி தாமதம் செயல் ஆகாதென்றிடர் மீசி
ராமா ராமா ராமா என்றெதிர் பேசிக்…
(கண்டேன்)

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ
[audio:kanden-seethaiyai.mp3]
இந்த ராகத்தைக் கேட்க YouTube-இல் தேடியபோது கிடைத்தது…அதையும் ரசியுங்கள்.

sadish

7 Comments

  1. மனச உருக வைக்கற பாடல். சூப்பர்.
    “தனித்து தன் உயிர் தன்னை ‘தான்விட’ மகராசி” இல்லையா? (அவங்க உயிரை விட நினைக்கும்போது ராமா ராமா-ன்னு எதிர்பேசி இல்லையா??)

  2. நானும் அதைப் போல தான் நினைச்சு பாடிக்கிட்டு இருந்தேன். ஆனா, சீதை தன் உயிர் விட யோசித்து இருக்க மாட்டார் என்று தான் நான் நினைக்கிறேன்.
    பாம்பே ஜெயஸ்ரீக்கு இந்தப் பாட்டைச் சொல்லிக் கொடுத்தவர்கள் தப்பாய் இருக்கலாம்.
    சீதைக்கு எப்படியும் தெரியும் “ராமன் வந்து காப்பாற்றுவான்” என்று. அவர் தற்கொலை எண்ணத்தைக் கொண்டிருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

  3. தனது கற்புத் திறத்தால் அந்த ஊரையே அழித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என ஒரு பாடல் கூறுகிறது.எல்லையில் உலகங்கள் என் சொல்லினால் சுடுவேன் அதை தூயவன் வில்லிற்கு மாசென்று வீசினேன் எனக் கூறுகிறார்.எனவே அவர் அப்படியொரு முடிவெடுத்திருக்க மாட்டார் என்பது எனது எண்ணம்.

  4. நானும் அதையே தான் நினைக்கிறேன் வேளராசி,
    வருகைக்கும் கருத்துப் பதிந்தமைக்கும் நன்றி.

  5. இனித்தாமதம் செயலாகாதென்றிடர் மீசி என்பது தப்பு. மீசி என்றொரு வார்த்தை
    தமிழில் இல்லை. அது வீசி என்று வரச்சாத்தியம் உண்டு.

  6. சீதா தற்கொலைக்கு முயலும் பொழுது தான் தடுத்து அனுமன் முன் நிற்கிறான். அப்போது தான் சீதாவும் தன் எண்ணம் தவறு இராமன் வருவான் என்று உறுதி கொள்கிறாள்

  7. தனித்துத்தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி
    சாரும்பொழுது காணும் சமய மிதுவே வாசி இனித்தா மதம் செய்யல் ஆகாதென்றிடர் வீசிi
    ராமராம ராமா ராமஎன்றெதிர் பேசி

    The above is an exact quote from aruNAcala Kavi’s rAma nATaka keerthanai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *