ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும்.
ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா?
அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே?
🙂
அதான் இல்லை.
என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார்.
அப்போ இந்தியாவின் பிரதமரா இருந்த “ஜவஹர்லால் நேரு” இறந்து விட்ட சமயம்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கண்ணதாசன் பாடல் எழுதி இருக்கிறார்.
சீறிய நெற்றி எங்கே
சிவந்த நல்லிதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை தான் போனதெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்த நன்னடைதான் எங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே..
இந்த பாட்டுக்குத் தான் ராஜா சார், முதல் முதலா இசை அமைச்சிருக்கார்.
பாடலைக் கேட்கணும்-னு உங்களுக்கும் ஆர்வமாய் இருக்குமே? கீழே கிளிக்குங்கள்.
இளையராஜாவின் இந்த ஒலிப்பதிவை எனக்கு அனுப்பிவைக்க முடியுமா?
எனது மின்னஞ்சல் முகவரி –
நன்றிகளுடன்.
வேதா.கி