ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதில் ஒரு கதை இப்படிப் போகிறது.
ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி இருக்கிறார்.
பேராசிரியர் பதட்டமாக “கோப்பை நிறைந்து இருக்கிறது. இதற்கு மேல் எவ்வளவு ஊற்றினாலும் அது தங்காது. வழிந்து வெளியேறிவிடும்.” என்கிறார்.
துறவி நிதானமாக “நீயும் இந்தக் கோப்பை போல தான் இருக்கிறாய்; முதலில் உன் கோப்பையைக் காலியாக்கு, அதற்குப் பின் நாம் ஜென் பற்றிப் பேசுவோம்” என்கிறார்.
இதைப் படித்துக் கொஞ்ச நேரத்தில், யதேச்சையாய், ராஜா சார், கல்கி இதழுக்கு, 1997-இல் கொடுத்த ஒரு பேட்டியின் PDF வடிவத்தைப் படிக்க நேர்ந்தது.
அதில் ராஜா சார் இந்தக் கதையின் சாரத்தையே குறிப்பிடுகிறார்.
சினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப் போன விஷயம்.இதற்குத் தான் மக்கள் தலையாட்டுவார்கள்.
என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால் தானே நான் அதில் ஏதாவது போட முடியும்?
நீங்கள் கொண்டுவருகிற போதே, அதில் எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டுவருகிறீர்கள். அதற்கு மேலும் அதில் நான் எதைப் போட முடியும்?
முழுப் பேட்டியையும் படிக்கக் கீழே கிளிக்குங்கள்.
கல்கியில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டி – PDF வடிவில்.
ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF… link pls 🙂
natty,
அந்த PDF தொகுப்பை இப்போது உங்களுக்காக வலையேற்றினேன்.
அது இதோ இங்கே !
இந்த சுட்டியை இந்தப் பதிவைத் திருத்தியே கொடுத்திருக்கலாம். ஆனால் தேடல் உள்ள உயிர்களுக்குத் தானே தினமும் பசி எடுக்கும். பசித்தவர்க்கு சோறிடுதல் தானே சிறந்தது. 🙂
hello bro thanks
Thank you for the article, Satish.
Though I am a fan of Ilayaraja, I think it is fair to say that he is over his head, especially when he renders interviews. His rantings are more often than not incorrigible, and makes us wonder why we liked him in the first place…. then we realise, it was/is/will be just his music, and not him.
@Aravindha,
Thanks for coming to this website and leaving your comments.
Dont worry if you do not understand his interviews, keep listening to the music, thats enough.
Hi Satish,
I do understand his comments (although my usage of the word incorrigible was in an entirely different sense, not specific to just this interview, but to all his interviews – past and present). Thats where the anger and frustration comes from.
Of course, I will continue to listen to his music.
Im Vijay from Mumbai (Bombay). Native from Kanyakumari.
Im working in Computer Designing. But I don’t like to sit computer without work.
vanthean padithean arinthukondean. Can u tell me how I can write it in TAMIL?
USA developed with Clever people like u. Then what India can do with the scam people (politicians-gundas).
Thanks.
I add ur site in my favourite. Keep it up. Meendum Santhippom.
திரு விஜய்…. நீங்கள் இந்த வலை தளத்தை உபயோகிக்கலாம். கூகுளில் தேடினால் கிடைக்காதது தூய அன்பு மட்டும் தான். மேலும் ஒன்று உங்களக்கு சொல்ல எனக்கு ஆசையாக உள்ளது. இந்த கிறுக்கல்.காம் வெப் சைட் நடத்தும் திரு சதீஷ் அவர்கள் தேடலினாலும், தனது முயற்சியாலும் அமெரிக்காவும் சென்று இது போன்ற நற்பணியாற்றி வருகிறார். அரசியல்வாதிகளையும், பிறரையும் குற்றம் கூறி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், மேலே ஆகா வேண்டியதை பாருங்கள் அன்பரே.
நன்றி
வணக்கம்