3

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalathaஸ்வர்ணலதாவின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளை எட்டிவிடும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களை இங்கே தருகிறேன்.

பாடல்: பாரடி குயிலே
இசை: இசைஞானி
படம்: நாங்கள்
[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/Naangal-PaaradiKuyile.mp3″ title=”பாரடி குயிலே”]

பாடல்: அந்திக் கருக்கையிலே
இசை: வித்யாசாகர்
படம்: அள்ளித் தந்த வானம்
[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/anthi-karukkaiyile.mp3″ title=”அந்திக் கருக்கையிலே”]

இதே படத்தில் இருந்து “தட்டான் கிடைக்கலையோ” என்று இன்னும் உருக்கமான பாடலும் ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார். அதைத் தேடல் உள்ளவர்கள் கேட்கட்டும்.

பாடல்: புதிய பறவை பறந்ததே
இசை: இசைஞானி
படம்: தென்றல் வரும் தெரு
[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/puthiya-paravai-paranthathe.mp3″ title=”புதிய பறவை பறந்ததே”]

ஸ்வர்ணலதா,
குரலாய் என்றென்றும் வாழ்வாய் நீ!

sadish

3 Comments

  1. மிக மிக வருத்தம் தந்த இழப்பு ஸ்வர்ணலதாவின் மறைவு… திரைப்பாடல் தாண்டி அவர் பாடி இருக்கும் தனிபாடல்களில் எண்ணெய் மிக கவர்ந்தது “நீயே நிரந்தரம்….”. இது ஒரு கிருத்துவ மதபாடல்… ஆயினும் அதன் வரிகள் அனைத்தும் அர்த்தம் செறிந்தது… உங்களுக்காக சில…. “செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்… பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்….நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்… அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…. அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…. நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம்…. ”

    பல நேரங்களில் என் துக்கம் தீர்க்கும் இந்த கானக்குயில் ஸ்வர்ணலதாவின் நிரந்தம் பாடல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *