சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம்.
பாடல் : கண்கள் இரண்டால்.
ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம்.
எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
“பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை”
பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ்.
பின்வரும் பாடல்களில் ஏதாவது ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா
அழகான ராட்சசியே – முதல்வன் – ஏ.ஆர்.ரகுமான்
சுடும் நிலவு சுடாத சூரியன் – தம்பி – வித்யாசாகர்
“இதுவா, இது ரீதிகௌளை” என்று சொல்லிவிட்டீர்களோ, உங்கள் முதுகில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.
பாடலைப் பார்க்க கீழே சொடுக்குங்கள்
வார்ப்புரு நல்லா இருக்கு, sathish. வலைப்பதிவுக்கு முழு ஓடை தருவீங்களா? நன்றி.
Call me Sadish or சதீஷ். Thats the right way.
This part I dont understand.
Do you want the theme for download? Its already available at http://wpthemeshop.com/free-themes/
Thanks
Sadish
பெயரதைத் தவறா அழைச்சதுக்கு மன்னிக்கவும் sadish.
wp-admin dashborad->settings->readings->for each article in a feed, show – > full text என்று தந்தால் கூகுள் ரீடரில் இருந்து உங்கள் இடுகைகளை முழுமையாகப் படிக்க உதவும். நன்றி.
நன்றி